Sindhanaigal - மனம் (மணம்) மகிழட்டும்


Tamil articles


Sindhanaigal:

அது ஒரு திருமண மண்டபம். முகூர்த்த நேரம் முடிந்ததும் மன மகள் வீட்டார் தங்கள் உறவுகளுக்கு, பதில் பரிசு (Return Gift) கொடுத்து கொண்டிருந்தார்கள்.


பெரிய ஹாலில் பல வித Gift பொருட்கள் வைத்துக்கொண்டு உறவுகளை அழைத்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.


தவறல்ல.


ஆனால் அவர்களின் செயல் பலரையும் வருந்த வைத்து விட்டது.


அதாவது உறவில் வித்தியாசம் காட்டியதோடு நில்லாமல் வசதியானவர்களுக்கு உயர்ந்த gift ம் அடுத்தடுத்து வகைக்கு ஏற்ப பிரித்து தந்து கொண்டிருந்தார்கள். ஒரு சாதாரண நிலை உறவினர் கையில் ஜாக்கெட் பாக்கெட்டுடன், உணர்வால் அடிபட்டு வெளியேறியது பார்க்க மிக பாவமாக இருந்தது.


இலட்சங்களில் செலவு செய்து கல்யாணம் செய்பவர்களே கொஞ்சம் யோசியுங்கள். மிக வேண்டியவர்களுக்கு தனியாக உங்கள் வீட்டிலோ, அவர்கள் வீட்டிலோ மரியாதை செய்து கொள்ளுங்கள். இது போன்ற பொது நிகழ்வுகளில் கூடியவரையில் ஒரே போன்ற gift ம் பார்சலும் செய்து உளமார, மனமார்ந்த நன்றியுடன் உறவுகள் எப்படி பட்டவராயினும் வித்தியாசம் காட்டாமல் சிரித்த முகத்துடன் வழியனுப்புங்கள்.


உங்கள் அழைப்பை ஏற்று வருகை தருபவர்கள் மனம் நொந்து போவானேன்? உறவுகளுடன் கலக்கவும், சந்தித்து மகிழவும் தானே வருகிறார்கள். அவர்களின் வாழ்த்தும் வாழ்த்துக்கள் தானே?


தயவு செய்து யோசியுங்கள்.தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.


மண நிகழ்வுகளில் மனம் அடிபட செய்யலாமா?






பி ப சுந்தர்.
ஹைதராபாத்