- சீதக் களபச் செந்தா மரைப்பூம்
- பாதச் சிலம்பு பலவிசை பாடப்
- பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
- வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
- பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
- வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
- அஞ்சு கரமும் அங்குச பாசமும்
- நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
- நான்ற வாயும் நாலிரு புயமும்
- மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
- இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
- திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
- சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
- அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
- முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
- இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
- தாயா யெனக்குத் தானெழுந் தருளி
- மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
- திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
- பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
- குருவடி வாகிக் குவலயந் தன்னில்
- திருவடி வைத்துத் திறமிது பொருளென
- வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
- கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
- உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
- தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
- ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
- இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
- கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
- இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
- தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
- மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
- ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
- ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
- ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
- பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
- இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
- கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
- மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
- நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
- குண்டலி யதனிற் கூடிய அசபை
- விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
- மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
- காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
- அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
- குமுத சகாயன் குணத்தையும் கூறி
- இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
- உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
- சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
- எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
- புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
- தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
- கருத்தினில் கபால வாயில் காட்டி
- இருத்தி முத்தி யினிதெனக் கருளி
- என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
- முன்னை வினையின் முதலைக் களைந்து
- வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
- தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
- இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
- அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
- எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
- அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
- சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
- சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
- அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
- கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
- வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
- கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
- அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
- நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
- தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
- வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
The anklets
on the red lotus feet
of the cool baby elephant
sing many songs.
The golden waist chain
and fine skirts
resting upon his rainbow waist
beautifully shining.
His weighty tusk!
His elephant face
& the auspicious orange mark
is easy to perceive.
Five hands,
goad & noose,
his body of deep blue
has made my breast its home.
His hanging mouth,
four sets of shoulders,
three eyes,
and three musk trails...
His two ears,
with golden hair shining,
and three threads intertwined
upon his glowing breast...
He is the true knowledge:
Turiya, the Sleepless Sleep,
goes beyond
the word's meaning.
Wonder
has stood personified
as the Wish-fulfilling Tree!
As the Bull Elephant!
He who rides the mouse
sniffs out the three fruits.
I begged him,
"Take me now...
as your servant!"
He appeared as a mother
and showered his grace upon me.
Cleaved from me
the confusion that...
"Once born, I shant die."
Thus the pristine
and primal letters five
shall unite with me.
Shall came and enter my heart.
Assuming the Guru's guise
and keeping a sacred foot
upon this Earth,
he establishes life's meaning.
He joyously bestowed the grace
of the Path of No-Suffering.
Wielding his tusk as a weapon,
he weeds out
the cruel fruits of action.
My ears devour his teaching
without ever being filled.
He reveals the insatiable
Clarity of Wisdom.
The means to master the five senses.
He has sweetly graced me
with joyous compassion.
He proclaimed
that single thought
which shrinks
the delusionary power of the senses.
Putting an end
to this birth
and the next,
he has removed darkness,
and graced me with all
the four stages of mukti (enlightenment).
He cuts off the delusion
of the three impurities.
With one mantra
he showed how
the Nine Openings
and the Five Sense Doors
can be shut...
This is the Ankusha (elephant-goad)
of the six chakras:
Without stopping...
Standing firmly...
Let idle chatter be discarded.
He announced the letter
of the Idylla & Pingala
and showed that the end
of the Circle's Edge
is in the skull.
The snake hangs
on the pillar
that is the junction
of the three realms.
He helped me realize
it's tongue.
In the Kundalini
one joins the silence...
It breaks open...
and the mantra that rises up
comes out
because of his teaching.
The rising flame,
breaking out
of Muladhara,
is caused to rise
by the wind.
Born of the single thought
which he has taught.
He related...
The state of drinking Amrita,
The movements of the Sun,
& the character of
The One Who Favors the Lily (the Moon).
He revealed
the 8+8 facets
of Vishudha Chakra
along with all the qualities
of my bodies wheels.
He sweetly graced me
with the ability to contemplate
the six faces gross
and the four faces subtle.
He enabled me to perceive
the subtle body,
and gain the darshan
of the Eight States.
He has revealed
within my mind
the Skull's Gate,
and given the sweet grace
of being established in mukti.
He made me know myself.
He showered me with grace.
He pulled out past karma...
by its root.
Without a single word or thought
my mind is one with him.
He has concentrated my mind,
clarified my intellect,
and said,
"Light & Darkness
share a common place."
He presses me down
into the grace giving ecstasy.
In my ear
he renders limitless bliss.
He has weeded out all difficulty
and shown the path of grace.
He has revealed Sada Shiva
within the sound.
He has revealed the Shiva Lingam
within the mind.
And he has revealed that...
The smaller than the smallest,
The larger that the largest,
stands within…
like ripe sugarcane.
He made me understand
the role of the ash
smeared on the brows
of the devotees merged in truth,
with whom
he made me
one.
He made both heart & mind
achieve the state of knowing
the precious meaning
of the Five Letters.
Having given to me
the True Nature of All Existence...
I am ruled
by the wise Vinayagar...
at whose feet
I take refuge.