Idarinum Enadhuru - En Ullam Kovil - Song Lyrics (in Tamil Font) - Thaarai Thappattai (2016)








Idarinum Enadhuru Noi Thodarinum
Ninkazhal Thozhudhezhuven
Vaazhinum Saavinum Varundhinum Poai
Veezhinum Ninkazhal Viduvaennallen
Thaazhilam Thadampunal Thayangusenni
Pozhilamadhivaitha Punniyane
Pozhilamadhivaitha Punniyane






En Ullam Kovil Ange Undu Deivam
Adhai Indha Geetham Allava
Sollava... Unnai Thodum Unmai Allavaa
Nee Vandhadhengo Naanum Vandhadhengo
Nammai Ingu Ondraai Serthathe
Isaiye Endhan Munbu Unnai Veithathe






Pirandhadhu Sittrooril Vaazhvadholai Kudilil
Irukkum Ivai Vandhu Ennai Enna Seyyum
Megamattra Vaan Pola, Thelindha Thaneer Pola
Oottredukkum Isai Amudham Endhan Meethu Odum
Nee Virumbum Neram Unakkidhu Vendum
Ungavanam Yaavum Pozhudhu Poga Theerum
Siridhe Isaithaalum Adhu Marundhaagum
Vaazhvenna Isai Enna Enakku Ondraagum
En Ullam Kovil Ange Undu Deivam
Adhai Indha Geetham Allava
Sollava... Unnai Thodum Unmai Allavaa

Oorgal Koodum Thirunaalai
Thodangi Veikkum En Koottam
Mudindhaal Oororam Odhungi Vaazha Vendum
Isai Deivam Kalaivaani Enakkarulum Bodhum
Oor Deivam Pesaadhu Saatchi Pola Paarkkum
Niraindha Endhan Nenjam Thirandhirukkum Vaanam
Kuraigal Thannai Thalli Unmai Kondu Vaazhum
Enakkendru Edhu Undu Ingu Indha Mannil
Endha Ethir Paarppum Illai Veru Enna Vendum

En Ullam Kovil Ange Undu Deivam
Adhai Indha Geetham Allava
Sollava... Unnai Thodum Unmai Allavaa

Lyrics in Tamil:

இடரினும்  எனதுறு  நோய்  தொடரினும் 
நின்கழல்  தொழுதெழுவேன் 
வாழினும்  சாவினும்  வருந்தினும்  போய் 
வீழினும்  நின்கழல்  விடுவேன்னள்ளேன் 
தாழிலம்  தடம்புனல்  தயங்குசென்னி 
போழிலமதிவைத்த  புண்ணியனே 
போழிலமதிவைத்த  புண்ணியனே 

என்  உள்ளம்  கோவில்  அங்கே  உண்டு  தெய்வம் 
அது   இந்த  கீதம்  அல்லவே 
சொல்லவா ... உன்னை  தொடும்  உண்மை  அல்லவா 
நீ  வந்ததெங்கோ  நானும்  வந்ததெங்கோ 
நம்மை  இங்கு  ஒன்றாய்  சேர்த்ததே 
இசையே  எந்தன்  முன்பு  உன்னை  வைத்ததே 

பிறந்தது  சிற்றூரில்  வாழ்வதோலை  குடிலில் 
இருக்கும்  இவை  வந்து என்னை  என்ன  செய்யும் 
மேகமற்ற  வான்  போல , தெளிந்த  தண்ணீர்  போல 
ஊற்றெடுக்கும் இசை  அமுதம் எந்தன்  மீது  ஓடும் 
நீ  விரும்பும்  நேரம்  உனக்கிது  வேண்டும் 
உங்கவனம்  யாவும்  பொழுது  போக   தீரும் 
சிறிதே  இசைத்தாலும்  அது  மருந்தாகும் 
வாழ்வென்ன  இசை  என்ன  எனக்கு  ஒன்றாகும் 
என்  உள்ளம்  கோவில்  அங்கே  உண்டு  தெய்வம் 
அது   இந்த  கீதம்  அல்லவா 
சொல்லவா ... உன்னை  தொடும்  உண்மை  அல்லவா 

ஊர்கள்  கூடும்  திருநாளை 
தொடங்கி  வைக்கும்   என்  கூட்டம் 
முடிந்தால்  ஊரோரம்  ஒதுங்கி  வாழ  வேண்டும் 
இசை  தெய்வம்  கலைவாணி  எனக்கருளும்  போதும் 
ஊர்  தெய்வம்  பேசாது  சாட்சி  போல  பார்க்கும் 
நிறைந்த  எந்தன்  நெஞ்சம்  திறந்திருக்கும்  வானம் 
குறைகள்  தன்னை  தள்ளி  உண்மை  கொண்டு  வாழும் 
எனக்கென்று  எது  உண்டு இங்கு  இந்த  மண்ணில் 
எந்த  எதிர்  பார்ப்பும்  இல்லை  வேறு  என்ன  வேண்டும் 

என்  உள்ளம்  கோவில்  அங்கே  உண்டு  தெய்வம் 
அது   இந்த  கீதம்  அல்லவா 
சொல்லவா ... உன்னை  தொடும்  உண்மை  அல்லவா